இந்தியா-ரஷ்யா இடையிலான வர்த்தகம், கடந்த 3 ஆண்டுகளில் 80 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
இந்தியா-ரஷ்யா இடையேயான வர்த்தக மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் மற்றும் இருநாடுகளின் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது பேசிய புதின், பல்வேறு துறைகளில் இந்தியாவுடனான உறவு வளர்ச்சி பெறுவதை தாங்கள் விரும்புவதாக தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட கொள்கையை பின்பற்றி வருவதாக குறிப்பிட்ட அவர், பிரதமர் மோடியின் சிறந்த பொருளாதாரக் கொள்கை மற்றும் மேக்-இன்-இந்தியா திட்டம் போன்ற திட்டங்களையும் பாராட்டினார்.
குறிப்பாக இந்தியாவில் ஐடி மற்றும் மருத்துவத்துறைகள் உலகின் முன்னணி இடத்தை பிடித்துள்ளதாக கூறிய அவர், பிரதமர் மோடி தலைமையில் இந்தியா பொருளாதாரத்தில் மிகச்சிறந்த உயரங்களை எட்டுகிறது என்றும் கூறினார்.
















