தமிழகத்தில் 98 புள்ளி 23 சதவீத SIR படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த நவம்பர் 4-ம் தேதி முதல் SIR பணிகள் தொடங்கிய நிலையில் வரும் 11-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதற்காக 68 ஆயிரத்து 470 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் மொத்தம் உள்ள 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்களில் 99 புள்ளி 81 சதவீதம் பேருக்கு, அதாவது, 6 கோடியே 39 லட்சத்து 95 ஆயிரத்து 854 படிவங்கள் விநியோகிக்கப்பட்டுவிட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அவற்றில் 6 கோடியே 29 லட்சத்து 79 ஆயிரத்து 208 படிவங்கள் அதாவது 98 புள்ளி 23 சதவீதம் திரும்பபெறப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணையம் அறிவித்துள்ளது.
















