திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 7 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக தெரிவித்தார்.
ஆடு வெட்டி பிரியாணி சாப்பிட்டால் வராத கலவரம் தீபம் ஏற்றினால் வருமா இந்த நாடு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் கருத்தும் என தெரிவித்தார்.
இந்துக்களை ஏமாளியாக நினைத்து ஓட்டு வாங்கிவிடலாம் என நினைக்கின்றனர் என்றும் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.
















