மைக்ரோ பிளாஸ்டிக் பாதிப்புகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மைக்ரோ பிளாஸ்டிக் தொடர்பாக மத்திய – மாநில சுகாதாரத் துறைகள் சார்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த அறிக்கைகளை ஆய்வு செய்த நீதிபதிகள், தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் மனிதர்கள் மீது, மைக்ரோ பிளாஸ்டிக்கின் பாதகமான தாக்கம் குறித்த விபரங்கள் இடம்பெறவில்லை என சுட்டிக்காட்டினர்.
மேலும், சூடான டீ, உணவுப்பொருட்களை பிளாஸ்டிக் கவரில் பார்சல் வழங்குவதாக குறிப்பிட்ட நீதிபதிகள், மைக்ரோ பிளாஸ்டிக் குறித்த விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.
















