பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்குள் கழுதை புகுந்து அட்டகாசம் செய்தாக இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது சர்வ சாதாரணமாக கழுதை ஒன்று அவைக்குள் புகுந்து எம்.பிக்கள் மீது மோதியது. ஒரு எம்.பி நிலைதடுமாறி நாற்காலியில் இருந்து கீழே விழுந்தார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கேலிகளை எதிர்கொண்டு வருகிறது. இது ஏஐ வீடியோ என்றும் கூறப்படுகிறது.
எக்ஸ் தள பயனாளர் ஒருவர், குடும்ப உறுப்பினர்களைக் காண்பதற்காக நாடாளுமன்றத்திற்குள் கழுதை புகுந்ததாகவும் தனது நாற்காலியில் யாரோ அமர்ந்திருந்திருப்பதை கண்டு கோபம் அடைந்ததாகவும் கிண்டல் செய்துள்ளார்.
அதேநேரம் நாடாளுமன்ற அவைக்குள்ளேயே கழுதை நுழையும் அளவிற்குதான் அங்கு பாதுகாப்பு உள்ளதாகவும் சிலர் விமர்சித்துள்ளனர்.
















