எலான் மஸ்க் நிறுவனத்துக்கு ஆயிரத்து 250 கோடி ரூபாய் அபராதம் விதித்து ஐரோப்பிய ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட தகவல் தொடர்பு நிறுவனங்களுக்குப் புதிய சட்டவிதிமுறைகளை ஐரோப்பிய ஒழுங்குமுறை ஆணையம் அறிமுகம் செய்தது.
அதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு சட்டவிதிகளை பின்பற்ற உத்தரவிடப்பட்டிருந்தது. எலான் மஸ்கின், எக்ஸ் வலைத்தளம் அந்தப் புதிய விதிகளுக்கு இணங்கவில்லை என்று தெரிகிறது.
இதுதொடர்பாக ஐரோப்பிய ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.இந்தநிலையில் விதிகளுக்கு இணங்க மறுத்த எக்ஸ் வலைத்தள நிறுவனத்துக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ஆயிரத்து 1259 கோடி ரூபாய்அபராதம் விதித்து ஐரோப்பிய ஒழுங்கு முறை ஆணையம் ஆணையிட்டுள்ளது.
















