நோபல் பரிசுக்கு ஏங்கிய டிரம்ப்புக்கு அமைதிக்கான பரிசைக் கால்பந்து சம்மேளனம் வழங்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் போர் உள்பட 8 போர்களை நிறுத்தியதாகத் தொடர்ந்து கூறி வருகிறார். இதற்காகத் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால், நடப்பாண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவர் மரியாவுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான அட்டவணை வெளியீடு நிகழ்ச்சி வாஷிங்டனில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு, சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் புதிதாக உருவாக்கப்பட்ட அமைதிக்கான பரிசு வழங்கப்பட்டது.
















