“முத்ரா” கடன் திட்டத்தில் அதிக நிதி பெறுவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்குக் கடன்களை வழங்கும் வகையில் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி முத்ரா யோஜனா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இந்த திட்டம் மூலம் தொழில் நிறுவனங்களுக்கு 50 ஆயிரம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.
2015ம் ஆண்டு முதல் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் வரை 32 லட்சத்து 40 ஆயிரத்து 538 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டிலேயே அதிக கடனை பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.
அதில் தமிழ்நாட்டில் 3 லட்சத்து 23 ஆயிரத்து 647 கோடியே 76 லட்சம் ரூபாய் கடனை சிறு, குறு நிறுவனங்கள் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வரிசையில் 2வது உத்தரப்பிரதேசமும், 3வது இடம் கர்நாடகாவும் இடம்பெற்றுள்ளது.
















