தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டி வெடித்து சிதறியதில் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது.
மீனாட்சிபுரத்தை சேர்ந்த காளியம்மாள் என்பவர் கார்த்திகை தீபத்தை ஒட்டி மெழுகுவர்த்தி ஏற்றியதோடு வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டிமீதும் சில மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்துவிட்டு அருகில் சென்றுள்ளார்.
அப்போது திடீரெனக் குளிர்சாதன பெட்டி முழுக்க தீயில் எரிந்ததோடு வெடித்து சிதறியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த காளியம்மாள் தீயணைப்பு துறைக்குத் தகவலளித்தார்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள் மின்சாரத்தை துண்டித்ததோடு தீயை போராடி அணைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் வீட்டில் இருந்து 2 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















