புதுச்சேரியில் போலி மாத்திரைகளை தயாரிக்கும் தொழிற்சாலையின் அலுவலகத்தை சிபிசிஐடி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
புதுச்சேரியில் சன் பார்மசி என்ற பெயரில் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருவதாக சிபிசிஐடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சோதனை மேற்கொண்ட போலீசார் 3 பேரை கைது செய்த நிலையில், அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் செட்டி தெருவில் உள்ள மருந்து ஆலையில் சோதனை மேற்கொண்டனர்.
அதில் தயாரிக்கப்பட்ட மருந்துகளை ஆய்வகத்திற்கு அனுப்பிய சிபிசிஐடி போலீசார் போலி மருந்து தயாரிக்கும் அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர்.
















