தென்காசி மாவட்டம் கடையம் அருகே மலைக்குன்றில் தலைமறைவாக உள்ள ரவுடியைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடையத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர் மீது கேரளாவிலும், தமிழக காவல்துறையிலும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
ஏற்கனவே திருச்சூர் சிறையில் இருந்த இவரை வழக்கு ஒன்றிற்காகத் தமிழகம் அழைத்து வந்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் கேரளாவுக்கு அழைத்துச் சென்றனர். அப்போது போலீசாரை தாக்கிவிட்டு ரவுடி பாலமுருகன் தப்பி சென்றதாகக் கூறப்படுகிறது.
கடையம் மலைக்குன்றில் தப்பியோடிய பாலமுருகனை பிடிக்கச் சென்ற 5 தனிப்படை போலீசார் வனப்பகுதிக்குள் சிக்கி தவித்தனர்.
பின்னர் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் பாலமுருகனை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
உணவு, குடிநீர் இன்றி 3 வது நாளாக ரவுடி உயிர்வாழ முடியாது என்பதால் அவர் வேறு பகுதிக்குச் சென்றிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
















