டெல்லியில் திருமண நிகழ்வின்போது மணமக்கள் இடையே நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவம் வைரலாகியுள்ளது.
திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான நிகழ்வாகும். பாரம்பரிய இந்து திருமணங்களில், மணமக்கள் சப்தபதி என்றழைக்கப்படும் ஏழு புனித வாக்குறுதிகளை கொடுத்து, தங்கள் வாழ்வை இணைந்து நடத்துவதாக உறுதி அளிப்பார்கள்.
இந்நிலையில், டெல்லியில் இந்து பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற திருமண நிகழ்வில் சுவாரஸ்யமான சம்பவம் அரங்கேறியது.
மணமக்கள் மயங்க், தியா பாரம்பரிய முறைப்படி 7 உறுதிமொழியை ஏற்ற நிலையில், மணமகன் மயங்க், இனிமேல் நம்முடைய அறையில் ஏ.சி. வெப்பநிலையைத் தாம் தான் நிர்ணயிப்பேன் என 8-வது உறுதிமொழியாக எடுத்துக்கொண்டார்.
இதனால் திருமண நிகழ்விற்கு வந்திருந்த விருந்தினர்கள் மற்றும் நண்பர்களிடையே சிரிப்பலை ஏற்பட்டது.
















