பிரிட்டனை விட்டுச் செல்லும் வெளிநாட்டினரின் பட்டியலில் இந்தியர்கள் முதலிடத்தை பிடித்துள்ளனர்.
வேலைக்காகவும், படிப்புக்காகவும் வெளிநாட்டினர் அதிகம் செல்லும் நாடுகளில் பிரிட்டன் முன்னணியில் உள்ளது.
39 சதவீதம் வெளிநாட்டினர் எண்ணிக்கை அதிகரித்ததால், உள்ளூர் மக்கள் சிரமப்படுவதாகப் பிரிட்டன் அரசு கூறியது.
இதனால், முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் அரசு கடுமையான விசா விதிகளை அறிமுகப்படுத்தியது.
இதனால் பிரிட்டனின் நிகரக் குடியேற்றம் வெகுவாகக் குறைந்தது. அதன்படி கடந்த இரு ஆண்டுகளில் 7 லட்சம் பேர் பிரிட்டனை விட்டு வெளியேறியது தெரியவந்துள்ளது.
















