பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புதின் குறித்து ஆங்கில செய்தி சேனல் வெளியிட்ட கார்ட்டூன் வீடியோ இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
ரஷ்ய அதிபர் புதின் 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்ததால், இரு நாடுகளின் நட்புறவு மேலும் வலுவடைந்துள்ளது.
இந்நிலையில் ஆங்கில செய்தி சேனல் ஒன்று, பிரதமர் மோடி – அதிபர் புதின் ஆகியோர் பாலிவுட் நட்பு பாட்டைப் பாடிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் ஒன்றாகச் செல்வது போன்ற கார்ட்டூன் வீடியோவை வெளியிட்டது.
அதில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என வலியுறுத்தும் டிரம்பை கிண்டல் செய்யும் காட்சிகளும் இடம்பெற்றன.
இதனைத் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரஷ்யா, ஆங்கில செய்தி சேனல் அட்டகாசமான கார்ட்டூன் வீடியோவை வெளியிட்டுள்ளதாகச் சிரித்துக் கொண்டே பாராட்டியுள்ளது.
















