இண்டிகோ விமானங்கள் ரத்து : பயணிகளுக்கு கட்டணம் திரும்ப கிடைக்குமா?
Jan 14, 2026, 02:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இண்டிகோ விமானங்கள் ரத்து : பயணிகளுக்கு கட்டணம் திரும்ப கிடைக்குமா?

Murugesan M by Murugesan M
Dec 6, 2025, 08:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடு முழுவதும் கடந்த நான்கு நாட்களில் 1000க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானச் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பயணிகளுக்கு முழு பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான உரிமையும் வாய்ப்பும் உள்ளதா ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

நாட்டின் மிகப் பெரிய விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ விமானங்களில் ஆண்டுக்குச் சுமார் 10 கோடிக்கும் அதிகமானோர் பயணம் செய்கின்றனர். கடந்த நான்கு நாட்களாக இந்நிறுவனத்தின் விமானச் சேவையில் பிரச்சனை ஏற்பட்டு அதன் செயல்திறன் முற்றிலுமாக முடங்கியுள்ளது.

இதனால், நாடு முழுவதும் 1000க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் விமான நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய சுழலில் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி யுள்ளனர். பாதிக்கப்பட்ட வாடிக்கையளர்கள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்கள் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகக் கூறியுள்ள இண்டிகோ நிறுவனத்திடம் கட்டணத்தைத் திரும்பப் பெற முடியுமா ? என்ற கேள்வி பயணிகளிடம் உள்ளது. இந்திய அரசின் சட்ட விதிகள் பயணிகளுக்கான உரிமை மற்றும் பாதுகாப்பையும் உறுதி செய்திருக்கிறது.

அதன்படி, ஒரு விமானம் ரத்து செய்யப்பட்டால், விமான நிறுவனங்கள் முழு பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும் அல்லது மாற்று விமானத்தை ஏற்பாடு செய்து தர வேண்டும்.

ரத்து செய்யப்படும்போது நேரத்தில் பயணிகள் விமான நிலையத்தில் இருந்தால், அடுத்த விமானம் வரும் வரைக்கும் குறிப்பிட்ட விமான நிறுவனமே பயணிகளுக்கு உணவு மற்றும் சிற்றுண்டிகளை வழங்க வேண்டும். இந்தியாவில் உள்ள ஒரு விமான நிறுவனம் விமானத்தை ரத்து செய்து, புறப்படுவதற்கு குறைந்தது மூன்று மணி நேரத்துக்கு முன் பயணிகளுக்குத் தெரிவிக்கவில்லை என்றால், DGCA விதிகளின் படி, இழப்பீடு வழங்க வேண்டும். பல மணி நேரங்களுக்கு மேல் தாமதமாகும் நிலையில், ஹோட்டல்களில் தங்குமிடம் மற்றும் போக்குவரத்துக்கும் விமான நிறுவனமே வசதி செய்து தர வேண்டும்.

இதனடிப்படையில்ல இண்டிகோ PLAN B என்ற திட்டத்தை வைத்துள்ளது. அதாவது விமானம் ரத்து செய்யப்படும்போதும், இரண்டு மணிநேரத்துக்கு மேல் விமானம் தாமதமாகும் போதும், PLAN B​​ நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. அதன் படி, கூடுதல் செலவு இல்லாமல் விமானப் பயணத்தை மற்றொரு நாளில் மற்றொரு நேரத்துக்கு மீண்டும் முன்பதிவு செய்யலாம் என்றும், இல்லையென்றால், ஏற்கெனவே செய்திருந்த முன்பதிவை முழுவதுமாக ரத்துசெய்துவிட்டு, நிறுவனத்திடம் இருந்து முழு பணத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PLAN B-யின் கீழ் பயணிகள் தங்கள் விருப்பதைத் தேர்வு செய்ய எந்தவிதமான கூடுதல் கட்டணங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இண்டிகோவின் அதிகாரப் பூர்வ இணையத்தளத்துக்குச் சென்று PNR எண்ணைக் குறிப்பிட்டுக் கட்டணப் பணத்தைத் திரும்பப் பெற முடியும். travel agent மூலம் முன்பதிவு செய்திருந்தால், அவர்கள் மூலம் பணத்தைத் திரும்பப் பெற வேண்டும்.

இதற்கிடையே, பயணிகளுக்குக் கட்டணத் தொகையை முழுமையாகத் திருப்பித் தரப்படும் என்றும், மேலும் டிசம்பர் 5ம் தேதி முதல் டிசம்பர் 15ம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்டதற்கும் வேறு நாளுக்கு மாற்றியதற்கும் எந்தவித கட்டணமும் இல்லாமல் முழு விலக்கு அளிக்கப்படும் என்றும் இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Tags: IndiGo Airlinesபயணிகள்IndiGo flights cancelled: Will passengers get a refund?இண்டிகோ விமானங்கள் ரத்துகட்டணம் திரும்ப கிடைக்குமா?
ShareTweetSendShare
Previous Post

ஹாலிவுட்டில் பிரமிப்பு உருவாகும் புதிய சாம்ராஜ்யம் : ரூ.7.44 லட்சம் கோடிக்கு வார்னர் பிரதர்ஸை வாங்கிய நெட்பிளிக்ஸ்!

Next Post

இந்தியாவுக்கு மலிவான, சுத்தமான மின்சாரம் : கூடங்குளம் பற்றி ரஷ்ய அதிபர் புதின் சொன்னது என்ன?

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies