நிலுவையில் உள்ள வழக்குகளை குறைப்பதற்கே முதல் முன்னுரிமை அளிப்பேன் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆங்கிலச் செய்தி சேனல் நடத்திய மாநாட்டில் பங்கேற்று பேசிய சூர்யகாந்த், உச்சநீதிமன்றம் சாமானிய மக்களுக்கும் உரியது எனத் தெரிவித்தார்.
மேலும், தேசிய நீதித்துறையின் கொள்கை நிலுவையில் உள்ள வழக்குகளை முன்கூட்டியே தீர்ப்பதன் அடிப்படையில் இருக்கும் எனவும் அவர் கூறினார்.
















