சென்னையில் சுமார் ₹5,000 கோடி ஏப்பம் விட்டு ருசி கண்ட திமுக - அண்ணாமலை குற்றச்சாட்டு!
Oct 17, 2026, 12:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னையில் சுமார் ₹5,000 கோடி ஏப்பம் விட்டு ருசி கண்ட திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Dec 6, 2025, 07:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வாழத் தகுதியற்ற நகரமாக சென்னை மாறிக் கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம், இந்த ஆக்கிரமிப்புதான் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, சேலம், திருச்சி, வேலூர் என பெரிய மாநகரங்கள் அமைந்துள்ள மாவட்டங்கள் அனைத்திலும், நீர்நிலைகளை ஆக்கிரமித்திருப்பவர்களுக்கும், திமுகவினருக்கும் பட்டா வழங்க, திமுக அரசு கடந்த டிசம்பர் 2, 2025 அன்று வருவாய்த்துறை அரசாணை எண் 920, 921 வெளியிட்டிருக்கிறது.

மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம், கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 7 அன்று, நீர் நிலைகளுக்குப் பட்டா வழங்கக் கூடாது என்றும், கடந்த 01.01.2000 ஆண்டுக்குப் பிறகு வழங்கப்பட்ட பட்டா அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்திருக்கும் நிலையில், வேண்டுமென்றே நீதிமன்றத் தீர்ப்பை மீறி, திமுக அரசு இந்த அரசாணையை வெளியிட்டிருக்கிறது.

நீதிமன்றத்தில் இந்த அரசாணை ரத்து செய்யப்படும் என்று தெரிந்திருந்தும், தேர்தலுக்காக நாடகம் நடத்திக் கொண்டிருக்கும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஒவ்வொரு மழைக்காலத்திலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், மாநகரங்கள், விவசாய நிலங்கள் வெள்ளக்காடாக மாறுவதற்கு முக்கியக் காரணம், இயற்கையான வடிகால்களான நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்திருப்பதுதான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, கடந்த பத்து ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும் சென்னை மாநகரம் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக, சென்னை கொளத்தூர் ஏரி, சுமார் 3,000 இடங்களில், 80% பரப்பளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் கடந்த சுமார் 15 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் வேறு யாருமில்லை, முதலமைச்சர் ஸ்டாலின் தான்.

இது தவிர, மொத்தமாக, சுமார் 12.6 சதுர கி.மீ பரப்பளவு இருந்த சென்னையின் பல பெரிய ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, இன்று வெறும் 3 சதுர கி.மீ பரப்பளவுக்கும் குறைவாகவே நீர் நிலைகள் உள்ளன. பள்ளிக்கரணை சதுப்பு நிலமும் பெருமளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, வாழத் தகுதியற்ற நகரமாக சென்னை மாறிக் கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம், இந்த ஆக்கிரமிப்புதான்.

இந்த நிலையில், மாண்புமிகு உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, நீர்நிலைகளுக்கு பட்டா வழங்க திமுக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது சட்ட விரோதமானது மட்டுமின்றி, எதிர்காலத்தில் ஒட்டு மொத்த தமிழகத்தையுமே பாதிக்கக்கூடியதாகும். இயற்கை வடிகால்களான நீர்நிலைகளை ஆக்கிரமித்துவிட்டு, மழைநீர் வடிகால் அமைக்கிறோம் என்ற பெயரில் சென்னையில் சுமார் ₹5,000 கோடி ஏப்பம் விட்டு ருசி கண்ட திமுக, தமிழகம் முழுவதும் இதைச் செய்யத் திட்டமிட்டுருப்பதாகவே தெரிகிறது. அதன் முதல்படிதான், நீர் நிலைகளுக்குப் பட்டா வழங்கும் முயற்சி. தமிழகத்தை வாழத் தகுதியற்ற மாநிலமாக மாற்றி, தமிழக மக்கள், விவசாயிகள் வாழ்க்கையை அழிக்க வழிகோலும் இந்த வருவாய்த்துறை அரசாணைகள் 920, மற்றும் 921 இரண்டையும், உடனடியாக, திமுக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

Tags: tn bjpchennai floodDMK - Annamalai alleges that around ₹5 thousands crore was wasted in Chennai!bjpnewsDMKbjp k annamalaiMK Stalin
Share
Tweet
SendShare
Previous Post

நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்கவே முதல் முன்னுரிமை – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த்

Next Post

திருப்பூரில் பெயரளவில் திடக்கழிவு மேலாண்மை : குப்பை மேடானது நொய்யல் ஆறு தீர்வு என்ன?

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies