திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக் கோரி ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு கிராம மக்கள் காவல்நிலையத்தில் மனு அளித்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்றுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் திமுக அரசு அனுமதி மறுத்து வருகிறது. இந்த செயலைக் கண்டித்து திருப்பரங்குன்றத்தில் பாஜக, இந்து முன்னணி உள்பட பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
இதனிடையே, தமிழக அரசுக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாதது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி, வருகிற செவ்வாய்கிழமை ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடத்த அனுமதி கோரி கிராம மக்கள் காவல்நிலையத்தில் மனு அளித்துள்ளனர்.
















