இண்டி கூட்டணி மீது அதிருப்தியில் இருக்கும் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், பாஜவுடன் கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜார்க்கண்டில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. அம்மாநில அமைச்சரவையில் இருகட்சிகளின் தலைவர்கள் அங்கம் வகிக்கும் நிலையில், இண்டி கூட்டணியில் இருந்து விலக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
முதலமைச்சர் ஹேமந்த் சோரன், அவரது மனைவி கல்பனா ஆகியோர் சமீபத்தில் டெல்லியில், பாஜக மேலிடத் தலைவர்களை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜார்க்கண்ட் அரசில் நிலவும் நிதி நெருக்கடியை சமாளிக்க பாஜக கூட்டணியில் இணைவது தொடர்பாக முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆலோசித்து வருவதாகவும், நாடு முழுவதும் காங்கிரசின் செல்வாக்கு சரிந்து வருவதால், அக்கட்சியை நம்பி இனி பயனில்லை என்ற முடிவுக்கு அவர் வந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
















