திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி இன்று ஆர்பாட்டம் நடத்தவுள்ள நிலையில், பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மாரி சக்கரவர்த்தி உள்ளிட்டோர் வீடடுக்காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ள நிலையில் அரசும் காவல் துறையும் தீபம் ஏற்ற அனுமதி மறுத்து வருகிறது. இதனை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சி இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இன்று ஆர்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாரதிய ஜனதா கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மாரி சக்கரவர்த்தி உள்ளிட்ட பாஜக முக்கிய நிர்வாகிகளை காவல்துறையினர் வீட்டு காவலில் வைத்துள்ளனர.
முதல்வர் மதுரையில் இருந்து புறப்படும் வரை அவர்கள் வீட்டுக்கு அவளில் வைக்கப்படுவார்கள் என காவல்துறை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
















