ஆட்சிக்கு வந்து 55 மாதங்கள் தாமதமாக, மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது ஏன்?’ என, முதல்வர் ஸ்டாலினுக்கு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், திமுக ஆட்சி முடிய இன்னும் 70 நாட்களே உள்ள நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு, தற்போது மடிக்கணினி வழங்குவது, முதலமைச்சர் ஸ்டாலினின், அப்பட்டமான கண்துடைப்பு நாடகம் என தெரிவித்துள்ளார்.
ஆட்சிக்கு வந்து, 55 மாதங்கள் தாமதமாக, மடிக்கணினிகள் வழங்குவது ஏன்? எனவும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புரட்சிகர திட்டத்தை நிறுத்த முயற்சித்து, அதன் பிறகு, மாணவர்களின் கோபத்திற்கு ஆளானதாலேயே லேப்டாப் வழங்க முடிவு செய்துள்ளீர்கள் என்பதை உங்களால் மறுக்க முடியுமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்
கடந்த அதிமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு, கல்லூரிக்குள் நுழையும் முன்பே மடிக்கணினிகள் வழங்கப்பட்டதாகவும், ஆனால், தற்போது திமுக ஆட்சியில் பள்ளி மாணவர்கள், முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது ஏன்? என்றும் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
















