திருப்பரங்குன்றம் விவகாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அங்காளி பங்காளி சச்சரவுக்காகவும், வாக்கு வங்கிக்காகவும் பயன்படுத்துவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்கு வங்கியே முதலமைச்சரின் நோக்கம் என தெரிவித்தார். திருப்பரங்குன்றம் விவகாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வாக்கு வங்கிக்காக பயன்படுத்துகிறார் என்று, பாஜக-வினர் இஸ்லாமியர்களுடன் மாமன், மச்சான் போல் பழகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சட்டப்படி தீபம் ஏற்ற அனுமதித்திருக்க வேண்டுமே தவிற 144 தடை போட்டிருக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.
“மாவட்ட ஆட்சியர் தொடங்கி முதலமைச்சர் வரை அனைவரும் செய்தது தவறு எனறும், நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
















