சென்னையில் மிருதங்கத்தின் இயக்கவியலை விளக்கும் வகையில் நான்கு தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீனவாச சாஸ்திரி அரங்கத்தில் “மிருதங்கத்தில் உள்ள இயக்கவியலை” அறிந்து கொள்ளும் வகையில் 2 நாட்கள் கருத்தரங்கம் நடைபெற்றது. தாள இசை பூங்காவில் நடந்து செல்லுங்கள், தாள வாத்திய இசையில் மிருதங்கம், துணை இசை மூலம் கச்சேரியை அலங்கரித்தல், எதிர்கால பாதையில் உலாவும் ஆகிய தலைப்புகளில் 4 பகுதிகளில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில், பத்ம விபூஷண் விருது பெற்ற உமையாளப்புரம் சிவராமன் மற்றும் பத்மபூஷண் விருது பெற்ற ராமசாமி ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் சிறப்பு கச்சேரிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், கருத்தரங்கில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
















