வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டை முன்னிட்டு மக்களவையில் சிறப்பு விவாதத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
இந்தியாவின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-இன் 150-வது ஆண்டை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் இன்று சிறப்பு விவாதம் நடைபெறுகிறது.
இந்த விவாதத்தைப் பிரதமர் மோடி இன்று மக்களவையில் தொடங்கி வைக்கிறார். அப்போது பாடலின் முக்கியத்துவம் மற்றும் அதிகம் அறியப்படாத வரலாற்று அம்சங்கள் குறித்து உரையாற்ற உள்ளார்.
பிரதமரை தொடர்ந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த விவாதத்தில் உரையாற்றுகிறார். அதன்பிறகு பிற கட்சிகளின் தலைவர்கள் பேச உள்ளனர்.
மக்களவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் கவுரவ் கோகாய் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
















