தீவிரவாத நக்சல் கிளர்ச்சியால் அதிகம் பாதிக்கப்பட்ட சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டம் தற்போது ஆம் பகிசா திட்டம் மூலம் வளர்ச்சியை நோக்கிய புதிய அத்தியாயத்தை எழுதி வருகிறது.
சுக்மா மாவட்டம், மாம்பழம் மற்றும் பிற பருவகாலப் பழங்கள் பயிரிடுவதற்கு மிகவும் ஏற்றச் சூழலைக் கொண்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி, விவசாயம் போன்ற பல வழிகளில் மக்கள் வருமானம் ஈட்டுவதற்காக ஆம் பகிசா திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் விளைவாக, ஒரு காலத்தில் வாழ்வாதார வாய்ப்புகள் குறைவாக இருந்த வனப்பகுதி கிராமங்களில், இப்போது மாற்றத்தின் காற்று வீசத் தொடங்கியுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் பழ ரகங்களை நடவு செய்ய ஆரம்பித்த மக்கள், இப்போது அறுவடைக்குத் தயாராக உள்ளதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
சுமார் 8 ஏக்கர் நிலப்பரப்பில், மாங்காய், எலுமிச்சை, தேங்காய் உள்ளிட்ட சுமார் 350க்கும் மேற்பட்ட ஒட்டு ரகக் கன்றுகளை கிராம மக்கள் நட்டுள்ளனர்.
நக்சல் வன்முறையால் அமைதியற்றிருந்த சுக்மாவில், இந்தத் தோட்ட விவசாயத்தின் மூலம் கிராமப்புற வாழ்வாதாரம் மேம்படுவது புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.
















