இந்தியாவில் உள்ள வங்கிகளில் சுமார் ஐந்து இலட்சம் குடிமக்களுக்குச் சொந்தமான, உரிமை கோரப்படாமல் இருக்கும் 190 கோடி வைப்புத்தொகையை திரும்ப ஒப்படைக்க மத்திய அரசு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
பழைய கணக்குகளை மறப்பது அல்லது கணக்கு வைத்திருந்தவர்கள் இறந்ததன் காரணமாகச் சுமார் 190 கோடி ரூபாய் உரிமை கோரப்படாமல் உள்ளது.
இந்தத் தொகையை உரியவர்களிடம் சேர்க்க, ரிசர்வ் வங்கி ஒரு புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த இணையதளத்தை பயன்படுத்தி, பயனர்கள் தங்கள் பெயர், மொபைல் எண், பான் எண் அல்லது பிறந்த தேதி ஆகியவற்றைப் பயன்படுத்தி, பல்வேறு வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத்தொகையை ஒரே நேரத்தில் அறிந்துகொள்ள முடியும்.
எனவே, இந்த வசதியை பயன்படுத்தி, தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான உரிமை கோரப்படாத வைப்புத்தொகை உள்ளதா என்பதை சரிபார்க்குமாறு மத்திய அரசுப் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
















