மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் போதிய முன்னேற்பாடுகள் செய்யப்படாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
மதுரை உத்தங்குடியில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காகச் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள், பெண்கள் என ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அழைத்துவரப்பட்டனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்படாததால் அவர்கள் கடும் அவதியடைந்தனர்.
இதனால் முதலமைச்சர் ஸ்டாலின் பேசத் தொடங்குவதற்கு முன்பே அவர்கள் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறத் தொடங்கினர்.
மேலும் முதலமைச்சரின் வருகைக்காகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
















