தேனி மாவட்டம் போடியில், திமுக கவுன்சிலர் சங்கருக்குச் சொந்தமான இடங்களில் ஜிஎஸ்டி, அமலாக்கத்துறை மற்றும் வருமானவரி அதிகாரிகள் 3-வது நாளாகச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
போடி திமுக கவுன்சிலரான சங்கர் ஏலக்காய் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். இதில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரில் அவரது வீடு மற்றும் குடோனில் சோதனை நடத்த வருமான வரித்துறையினர் சென்றனர்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தராமல் சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகி விட்டனர்.
இதையடுத்த சங்கரின் வீடு, ஏலக்காய் குடோன் உள்ளிட்ட இடங்களில் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் உதவியுடன் ஜிஎஸ்டி, அமலாக்கத் துறை மற்றும் வருமானவரி அதிகாரிகள் 3வது நாளாகச் சோதனை நடத்தி வருகின்றனர்.
















