பாலக்கோட்டில் நடைபெற்ற போராட்டத்தின்போது, தவெக தொண்டர் காவலர் ஒருவரின் கையை கடித்த வீடியோ வைரலாகி வருகிறது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் கடந்த நவம்பர் 22-ம் தேதி, மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தனியார் மதுபானக்கடை திறக்கப்பட்டது.
இதனை மூட வலியுறுத்தித் தவெக தொண்டர்கள் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சம்மந்தப்பட்ட கடையை முற்றுகையிடவும் முயன்றனர்.
இதனால், போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்குடம் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது, தவெக தொண்டர் ஒருவர் தன்னை தடுத்த காவலரின் கையை கடித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.
















