பிரபல தொழிலதிபரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான நவீன் ஜிண்டால், தனது மகளின் திருமண விழாவில் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நவீன் ஜிண்டாலின் மகள் யசஸ்வினி ஜிண்டால் மற்றும் சஷாவத் சோமானி ஆகியோரின் திருமண விழா, கடந்த வாரம் டெல்லியில் கோலாகலமாக நடைபெற்றது.
இதில் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் குடும்பங்களில் ஒன்றான ஜிண்டால் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சகோதரர்களும் மேடையில் ஒன்றுசேர்ந்து நடனமாடினர்.
“நா நா நா நா ரே” என்ற ஹிந்தி பாடலுக்கு அவர்கள் நடனமாடிய வீடியோவை சஜ்ஜன் ஜிண்டாலின் மனைவி சங்கீதா ஜிண்டால் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.
பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் நவீன் ஜிண்டால் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
















