தெலங்கானாவில் அமெரிக்க தூதரக அலுவலகம் அமைந்துள்ள சாலைக்கு அதிபர் டிரம்ப்பின் பெயர் வைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் டெல்லியில் நடந்த இந்திய – அமெரிக்க நாடுகளின் மாநாட்டில் பேசிய தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ஹைதராபாத்தின் முக்கிய சாலைகளுக்கு முன்னணி உலக நிறுவனங்களின் பெயர்களை சூட்ட இருப்பதாக அறிவித்தார்.
அதன்படி, மிக முக்கிய சாலைக்கு ‘டொனால்ட் டிரம்ப் அவென்யூ’ என்று பெயர் வைக்கவும், புதிய க்ரீன்பீல்டு சாலைக்கு, மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் பெயர் சூட்டப்படவும் உள்ளது.
















