500 கோடி ரூபாயை கொடுப்பவர்கள் தான் முதலமைச்சர்கள் ஆகிறார்கள் என்று பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி கவுர் குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் சித்துவை தல்வர் வேட்பாளராக அறிவித்தால், மீண்டும் தீவிர அரசியலுக்கு திரும்புவார் என்றும், தற்போது அவர் நன்கு பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் எனவும் கூறியுள்ளார்.
முன்னாள் பஞ்சாப் காங்கிரஸ் தலைவரான சித்து, கடந்த பல மாதங்களாகக் கட்சியின் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
















