மக்களவையில் இன்று எஸ்ஐஆர் குறித்த விவாதம் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும்
வருகிறது. எஸ்ஐஆர் குறித்து விவாதிக்க வேண்டும் என முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்தன.
இதனையடுத்து, மக்களவையில் இன்று எஸ்ஐஆர் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. எஸ்ஐஆர் தொடர்பான விவாதத்தை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவாதத்தில் முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் மேக்வால் நாளை பதிலளித்து பேசவுள்ளார்.
இதனிடையே, பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் இந்த கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
















