தேசிய கீதத்திற்கும், தேசிய பாடலுக்கும் சமமான இடம் வழங்கப்பட வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்களவையில் பேசிய அவர், 1937ம் ஆண்டு வந்தே மாதரம் பாடலை காங்கிரஸ் துண்டு துண்டாக்க முடிவு செய்ததாக குற்றம்சாட்டினார். இது அந்த பாடலுக்கு இழைக்கப்பட்ட அநீதி மட்டுமல்ல, சுதந்திர இந்தியாவின் மக்களையும் அவமதிப்பதை போன்றது என அவர் விமர்சித்தார்.
தேசிய கீதம் நமது தேசிய உணர்வில் இடம்பிடித்துள்ள அதே வேளையில், தேசிய பாடல் ஓரங்கட்டப்பட்டுள்ளதாகவும் ராஜ்நாத் சிங் வேதனை தெரிவித்தார்.
வந்தே மாதரம் பாடலின் மகிமையை மீட்டெடுப்பது காலத்தின் கட்டாயம் என குறிப்பிட்ட அவர், அப்பாடல் தன்னளவில் முழுமையானது என கூறினார்.
















