ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டெய்னர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
சென்னை ராயபுரத்தில் அனைத்து லாரி உரிமையாளர் சங்கம் நிர்வாகிகள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த லாரி உரிமையாளர்கள், ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நள்ளிரவு முதல் அனைத்து லாரிகளை இயக்கப்போவதில்லை என ஒருமனதாக முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளனர்.
மேலும், சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய துறைமுகங்களை சார்ந்த எந்த வேலைகளுக்கும் தங்கள் வாகனங்களை இயக்கப்போவதில்லை எனவும் லாரி உரிமையாளர்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
















