குன்றத்தூர் அருகே நடந்த அரசு விழாவில் திமுக ஒன்றிய சேர்மன், கடவுள் உருவத்தில் தனது முகம் பொறித்த ஜாக்கெட் அணிந்து வந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட படப்பை பகுதியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதிய அரசு கட்டடங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில், அமைச்சர் தா.மோ. அன்பரசன், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விழாவில் குன்றத்தூர் திமுக ஒன்றிய சேர்மன் சரஸ்வதி மனோகரன் அணிந்திருந்த ஜாக்கெட் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜாக்கெட்டின் இரண்டு கைகள் மற்றும் முதுகுப் பகுதிகளில், சரஸ்வதி தேவியின் புகைப்படத்தில், ஒன்றிய சேர்மன் சரஸ்வதி மனோகரின் முகம் இடம்பெற்றிருந்தது.
இந்த வினோதமான உடையை பார்த்து விழாவுக்கு வந்திருந்தவர்கள் முகம் சுளித்து சென்ற நிலையில், பொது நிகழ்ச்சியில் மக்கள் பிரதிநிதி ஒருவர் சர்ச்சைக்குரிய உடையை அணிந்து வந்தது பேசுபொருளாகியுள்ளது.
















