திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென கிராம மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் என 30க்கும் மேற்பட்ட மனுக்களை ஆட்சியரிடம் அளித்தன.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதனை, தமிழக அரசும், இந்து சமய அறநிலைய துறையும் நிறைவேற்றாததால் இந்த விவகாரம் பூதாகரமாகி உள்ளது. மேலும், தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வு மற்றும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் எனவும் தற்போது ஏற்றக்கூடிய இடம் இறந்தவர்களுக்காக மோட்ச தீபம் ஏற்றப்படும் இடம் எனவும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் 30க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் அளித்துள்ளனர்.
மேலும், மத நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் தமிழக அரசும், இந்து சமய அறநிலைத்துறையும் நடந்து வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
















