கோவை விமான நிலைய விரிவாக்கத்தை முடுக்கிவிட்ட மத்திய அரசுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தின் தற்காலிக விரிவாக்கப் பணிகளுக்காக ₹10.92 கோடியை ஒதுக்கி, டெண்டர் கோரியுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
விமான நிலைய விரிவாக்கப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், ஏற்கனவே இருக்கும் உட்கட்டமைப்பு வசதிகளை ஆறு மாதங்களில் மேம்படுத்தி, பயணிகளின் நலனை மேலும் முன்னேற்றும் இத்தகைய சீரிய நடவடிக்கை மிகுந்த பாராட்டுக்குரியது என்றும் அவர் கூறியுள்ளார்.
கோவை மாநகரின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் இத்தகைய திட்டத்தை முன்னெடுத்து நிதி ஒதுக்கிய நமது பிரதமருக்கு , அதற்கு உறுதுணையாக இருந்த விமானப் போக்குவரத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவுக்கும் நயினார் நன்றி தெரிவித்துள்ளார்.
















