ஜப்பானில் 7.8 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
ஜப்பானின் வடக்கு கடற்கரையோரப் பகுதிகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மிசாவா பகுதியில் இருந்து 73 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, வடக்கு கடற்கரையில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஹொக்கைடோ தீவில் உள்ள உரக்வா பகுதியில் இருந்து முட்சு ஒகவாரா வரை சுனாமி ஏற்படலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
















