சென்னை மடிப்பாக்கத்தில் நிற்காமல் சென்ற காரை தூரத்தி பிடிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் போக்குவரத்து காவலர் உயிரிழந்தார்.
மடிப்பாக்கம் போக்குவரத்து காவல்நிலையத்தில், மேகநாதன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் பள்ளிக்கரணை கைவெலி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த காரை மடக்க முயன்றார்.
ஆனால் அந்தக் கார் நிற்காமல் சென்றுள்ளது. இதனால் மேகநாதன் தனது இருசக்கர வாகனத்தில் காரை துரத்தி பின் தொடர்ந்து சென்றுள்ளார்.
பள்ளிக்கரணை மேம்பாலத்தில் காரை மடக்க முயன்றபோது மேகநாதன் தவறி விழுந்து காரின் டயரில் சிக்கி உயிரிழந்தார்.
இதனிடையே விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய ஒட்டுநர் சாய்ராமை அடுத்த மூன்று நேரத்தில் கைது செய்த போலீசார், அவரின் காரையும் பறிமுதல் செய்தனர்.
















