தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் காவல்துறையின் விதிமுறைகளை மீறிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்தை, புதுச்சேரி முதுநிலை கண்காணிப்பாளர் ஈஷா சிங் எச்சரித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
புதுச்சேரியின் உப்பளம் பகுதியில் தவெகவின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வுக்குப் போதிய அளவில் கூட்டம் வராததால், QR-CODE அனுமதி சீட்டு இல்லாதவர்களை அனுமதிக்க கோரி முதுநிலை கண்காணிப்பாளர் ஈஷா சிங் உடன் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால், ஆத்திரமடைந்த பெண் காவல் அதிகாரி, தவெக கூட்டத்தால் ஏற்கனவே நிறைய பேர் உயிரிழந்தனர் என்றும், யாரேனும் பாதிக்கப்பட்டால் புதுச்சேரி காவல்துறைதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஆவேசமாகப் பேசினார்.
மேலும், காவல்துறை என்ன செய்ய வேண்டும் என்பதை தவெகவினர் சொல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
















