சபரிமலையில் ரோப் கார் சேவை அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணியை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தொடங்கி உள்ளது.
பம்பையில் இருந்து 5 கிலோ மீட்டர் துாரத்தில் மலைமீது அமைந்துள்ள சபரிமலை சன்னிதானத்திற்கு பொருட்கள் கொண்டு செல்வது மிகப்பெரிய சவாலாக உள்ளது.
தொடக்கத்தில் கழுதை மீது கொண்டு செல்லப்பட்ட பொருட்கள், தற்போது டிராக்டர்களில் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்தநிலையில் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை ரோப்கார் ‘ போக்குவரத்து சேவையைத் தொடங்க முடிவு செய்த திருவிதாங்கூர் தேவசம்போர்டு, அதற்கான பலகட்ட பணிகளை முடித்துள்ளது.
அடுத்த மாதம் மகரஜோதி விழாவின் போது, ரோப்காருக்கான கேபிள்கள் அமைக்க அடிக்கல் நாட்டப்படும் எனத் தேவஸ்தான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
















