திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அமைச்சர் சேகர்பாபுவுக்கு கருப்பு கொடி காட்ட முடிவெடுத்த இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் அன்னதான திட்ட தொடக்க விழாவிற்கு அவர் வந்ததால் தங்களின் முடிவை மாற்றிக் கொண்டனர்.
கொடைக்கானலுக்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வருவதை அறிந்த இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் திருப்பரங்குன்றம் விவகாரத்தை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனார்.
ஆனால் சேகர்பாபு குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் அன்னதான திட்டத்தை தொடங்கி வைக்க வந்ததால், பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் தங்களின் முடிவை மாற்றி கொண்டனர்.
மேலும் இந்த விவகாரத்தில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தனது தவறை திருத்தி கொள்ள வேண்டுமென்றும் பாஜகவினர் தெரிவித்தனர்.
















