மதுரையில் பட்டா கொடுப்பதாகக் கூறி அதிகாரிகள் ஏமாற்றிவிட்டதாக ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் புகார் மனு அளித்தனர்.
மதுரை மாநகராட்சி தல்லாகுளம் அருகே கமலா நகரில் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 60 ஆண்டுகளாக வசித்து வரும் நிலையில், பட்டா கேட்டு அரசிடம் விண்ணப்பித்துள்ளனர்.
கமலா நகரில் பட்டா அளவீடு செய்த வருவாய்த்துறை அதிகாரிகள், 40 வீடுகளுக்குப் பட்டா வழங்கப்படும் எனக்கூறி சென்றுள்ளனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 19 பேருக்கு மட்டும் பட்டா வழங்கியதால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், ஆதி தமிழர் பேரவையினருடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்குப் பட்டா வழங்கியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகப் பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
















