நாட்டுமக்களை துன்புறுத்தக் கூடாது என்பதற்காகவே விதிகளும், சட்டங்களும் உள்ளதாகப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் விமானப் போக்குவரத்துத் துறை நெருக்கடிகுறித்து பிரதமர் தெரிவித்த கருத்துகளின் விவரங்களை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பகிர்ந்து கொண்டார்.
அதன்படி, இண்டிகோ விவகாரத்தில் மக்கள் எந்தச் சிரமத்தையும் எதிர்கொள்ளக் கூடாது எனப் பிரதமர் கூறியதாகத் தகவல் தெரிவித்துள்ளார்
















