நடப்பாண்டில் உலகம் முழுதும் மக்கள் அதிகம் தேடிய 10 செய்திகளின் பட்டியலைக் கூகுள் வெளியிட்டுள்ளது.
அந்தவரிசையில் முதலிடத்தில் டொனால்டு டிரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க், கடந்த செப்டம்பரில் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி அதிகமாகத் தேடப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்தபடியாக இஸ்ரேல் – ஈரான் போர், அமெரிக்க அரசு முடக்கம், புதிய போப், லாஸ் ஏஞ்சல்ஸ் தீ விபத்து, ஜமைக்காவில் ஏற்பட்ட மெலீசா சூறாவளி உள்ளிட்டவை அதிகளவில் தேடப்பட்டுள்ளன.
















