நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கலைப்பொருட்கள் வாட்டிகனில் இருந்து கனடாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆர்டிக் பகுதிகளில் வாழும் இனுயிட் மக்களால் வேட்டையாடுவதற்காக உருவாக்கப்பட்ட தோல் மற்றும் மரத்தால் ஆன சிறிய வகை படகாகும்.
இதன் மூலம் திமிங்கலம், சீல் போன்ற கடல் வாழ் உயிரினங்கள் வேட்டையாடப் பயன்படுத்தப்பட்டது.
இந்த இனுயிட் கயாக் என்னும் சிறிய வடிவ படகு உள்ளிட்ட பல கலைப்பொருட்களை 1920-களில் கத்தோலிக்க மிஷனரிகள் மூலம் கனடாவில் இருந்து வாட்டிகனுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் கனடாவில் பூர்வீக குடிகளின் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் 100 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த அரிய இனுயிட் கயாக் உட்பட பல பூர்வீக கலைப்பொருட்கள் கனடாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கனடாவுக்கு வந்த பூர்வீக கலைப்பொருட்களைப் பழங்குடியினர்கள் சடங்குகள் நடத்தி வரவேற்றனர்.
















