இன்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து உரையாடினார்.
இன்டெல் தலைமை நிர்வாக அதிகாரி லிப்-பு டான் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். தனது பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்திய பிரதமரை சந்தித்ததில் பெருமையடைவதாக தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பம், கணினி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடியதாகவும் அவர் கூறியுள்ளார்.விரிவான செமி கண்டக்டர் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கொள்கையை நடைமுறைப்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு இன்டெல் நிறுவனத்தின் சிஇஓ பாராட்டும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும், அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செயலாளர் அலிசன் ஹூக்கர் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், பாதுகாப்பு, அணுசக்தி ஒத்துழைப்பு, எரிசக்தி ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
















