கூட்டணி குறித்து முடிவெடுக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது,
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் 16 ஆயிரம் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டணிக்கான கட்சிகளை முடிவு செய்ய இபிஎஸ்க்கு அதிகாரம்
வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக- பாஜ கூட்டணி சேர்ந்து போட்டியிட அங்கீகாரம்
தமிழகத்தில் கூட்டணிக்கு அதிமுகவே தலைமை தாங்கும்
நீதித்துறை மீதான ஆட்சியாளர்களின் மிரட்டல்களை கைவிடவேண்டும். நீதித்துறையில் அரசின் தலையீடு இருக்கக் கூடாது. நீதித்துறைக்கே சவால்விடும் ஆட்சியாளர்களின் ஆதிக்க மனநிலையை கண்டனம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு வரவேற்பு
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும்
மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு முறையான புள்ளி விவரங்களை அனுப்பாத திமுக அரசுக்கு கண்டனம்
தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளாக சிறுமிகள், இளம் பெண்கள், வயதான பெண்கள் என அனைத்து தரப்பு பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டனம்
நீட் உளிட்ட திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றாதற்கு கண்டனம்
இபிஎஸ்-ஐ மீண்டும் முதல்வர் ஆக்க சூளுரைப்போம் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
















