கேரளாவின் பிரசித்தி பெற்ற சபரிமலையில் 22 நாட்களில் 95 பாம்புகள் பிடிபட்டுள்ளன.
சபரிமலையில் மண்டல காலம் தொடங்கி 22 நாட்கள் கடந்த நிலையில் சன்னிதானம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இருந்து 95 பாம்புகள் பிடிக்கப்பட்டு பெரியார் புலிகள் சரணாலய உட்காட்டுக்குள் விடப்பட்டுள்ளன. பாம்புகளை பிடித்து காட்டுக்குள் கொண்டு விட ஆறு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு பிடிக்கப்பட்ட பாம்புகள் விஷத்தன்மை குறைந்தவை என்றும் 15 பாம்புகள் மட்டுமே சற்று கூடுதல் விஷத்தன்மை கொண்டது என்றும் பாம்பு பிடி நிபுணர் குழுவின் தலைவர் பைஜூ தெரிவித்துள்ளார். கடந்த மண்டலகால சீசனில் 365க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்ததாக அவர் கூறினார்.
















